Announcement / முக்கிய அறிவித்தல்
 
 
 
 

உங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்கான எமது ஆலோசனைகள்

எமது இணையத்தளத்தில் உங்களை பற்றிய விவரங்களை (Profile) நாம் தரவேற்றம் செய்வதோடு எமது பணி முற்றுப் பெற்று விடுகின்றது. எனினும் இதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துணையோடு நீங்கள் வளமோடு சீரோடு வாழ்ந்தால் தான் எமது பணியில் நாம் முழு நிறைவடைய முடியும். எனவே தான் ஒரு சில ஆலோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாம் விரும்புகின்றோம்.

  • உங்களை எவராவது தொடர்பு கொள்ளும்போது, முதலில் அவர்களிடம் உங்களது ஈமெயில் மற்றும் தனிப்பட்ட முகவரி, தொலைபேசி இலக்கம் என்பற்றைக் கொடுத்து விடுவது நல்லதல்ல.
  • நாம் அறிமுகப்படுத்தியுள்ள Express Interest - Private Message மூலம் உங்களுக்கு அறிமுகமானவருடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது உங்களுக்கு மிகுந்த பலன் தருவதாய் அமையும்.
  • முதலில் பரிமாறிக் கொள்வதற்கென தனிப்பட்ட ஈமெயில் முகவரியை வைத்துக் கொள்வது சிறப்பானது.
  • உங்களைத் தொடர்பு கொள்பவரிடம் முதலில் அவரது புகைப்படத்தை அனுப்பச் சொல்லுங்கள். ஒருவரது புகைப்படத்தைப் பார்த்தால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை ஓரளவு ஊகித்துக் கொள்ள முடியும். அத்துடன் அந்த புகைப்படத்தை ஏனையோரிடம் காட்டி அவர்களது அபிப்பிராயத்தையும் அறிந்து கொள்வது நல்லது.
  • எந்த முடிவையும் தனியாக எடுக்காதீர்கள். வீட்டாருடன், உறவினர், நண்பர்களுடன் கலந்தாலோசிப்பது பின்விளைவுகளைத் தவிர்க்கப் பெரிதும் உதவும்.
  • அவர்கள் முரண்பாடான தகவல்களை குறிப்பாக தொலைபேசி இலக்கம், ஈமெயில், முகவரி என்பன தந்திருக்கின்றார்களா என்பதைக் கவனியுங்கள்.
  • உங்களுடன் ஒரு சுமுகமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் உங்களைத் தனியாகச் சந்திக்க அவர் எத்தனித்தால் தனியாகப் போகாது நண்பர். உறவினருடன் செல்வதே உகந்தது.
  • நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் நேரடியாகப் பதில் சொல்கின்றாரா என்பதை அவதானியுங்கள்.
  • அவரை நேரில் சந்திக்கும்போது Profile இல் அவர் தந்த விவரங்களும் நேரில் கூறும் தகவல்களும் சரியாக உள்ளனவா என்பதைக் கவனிப்பதும் நல்லது.
  • அவர் உண்மையானவராக இருந்தால், அவரது வீட்டாரை உறவினரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பவராக இருப்பார். அவ்வாறில்லை என்றால் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது.
  • அவர் உங்களைச் சமாளிப்பவராக இருப்பது தெரிந்தால், முழுமையாக அவரில் திருப்தி ஏற்படும் வரை காத்திருங்கள்.
  • இறுதியாக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்றுள்ளது. ஏதாவது காரியமாக அவர் பணம் கேட்டால் கொடுத்து விடாதீர்கள். அப்படிக் கேட்டு உங்களைத் தொந்தரவு செய்தால் உடனடியாக எம்மோடு தொடர்பு கொண்டு அவரது விவரக் கோவையைத் (Profile) தெரியப்படுத்துங்கள். நாம் தீவிர பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்.
  • முழுமையான பரிசோதனையின் பின்னரே நாம் ஒருவரது விவரங்களைத் (Profile) தரவேற்றம் செய்கின்றோம். எனினும் அதனையும் மீறி ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின், உடனடியாக எமக்கு அறியத் தாருங்கள். மீள்பரிசோதனை செய்யப்பட்டு, அதனை நிவர்த்திப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இது முழுக்க உங்களது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். இது குறித்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய கடப்பாடு உங்களுக்கு மட்டுமே உள்ளது. உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், நீங்கள் நிதானமாகச் சிந்தித்து மற்றவரோடும் கலந்து பேசி தீர்க்கமான முடிவை எடுங்கள். அப்போது தான் எங்களது பணியில் எமக்கும் நிறைவு ஏற்படும்.

எமது புதிய இணையத்தளத்தின் வாயிலாக உங்கள் வாழ்க்கைத் துணையை இலகுவாகத் தேடி, வளமுடன் பல்லாண்டு காலம் வாழ இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

 
 
 
 
© 2013 Thirumanam.lk - All Rights Reserved. Developed by Newssmart